தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் முழுவதும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு கூட்டத்தின் சிறப்பு முகாம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை அன்று ஒவ்வொரு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி பட்டியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைபெறும் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையத் முஹமத் தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் உள்ள குறைபாடுகள், கடைகளில் செயல்பாடுகள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றுதல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற செயல்பாடுகள் குறித்து அளிக்கும் மனுவுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் சுருளிப்பட்டி பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பெயர் திருத்தம், முகவரி மாற்றம்,பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், கடை மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் போன்ற பல்வேறு விண்ணப்பங்களை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கினார். மனுக்களை பெற்ற கோட்டாட்சியர் உரிய தீர்வு உடனடியாக காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
