

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் அவர்கள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மதிப்பு மிக்க மனித உயிர்கள் பலியாக கூடிய ஒரு நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக இந்த பள்ளத்தை சரி செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


