• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் ஜூன் 4ல்தடையில்லா மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை:

ByN.Ravi

Jun 3, 2024

சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை மின்தடையை
சரி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 4 ஆம் தேதி அதாவது நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை பார்க்க பொதுமக்கள் மிக ஆவலாக உள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஜூன் 4-ஆம் தேதி அதாவது, நாளை ஒருநாள் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் மின்தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நாளையும் மின் தடை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.