• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை..,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 5.28 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.  எனவும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியீட்டு உள்ளது 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில், நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில், 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய், தங்கம் 1.9 கிலோ, வெள்ளி 72.25 கிலோ, பித்தளை 84.67 கிலோ, செம்பு 80.54 கிலோ மற்றும் 1922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், இணை ஆணையர் க.ராமு, முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் மத்தியில் கழிவறை கட்ட வேண்டும். பல்வேறு பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நடவடிக்கை எடுப்பாரா?  என்பது மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது