• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

May 29, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி இருக்கும் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் முழங்கால் அளவு பள்ளங்கள் உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளதால் பள்ளிகளை திறக்கும் முன்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.