மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உரப்பணூர், புள்ளநேரி, கரடிக்கல், கோவிலாங்குளம், கண்ணணூர் சிறிய கண்மாய் மற்றும் பெரிய கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உதவி பொறியாளர் மதுமிதா தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது.,

இந்த ஏலத்தில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு கண்மாய்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற 6500 முதல் 8500 வரை ஏலம் எடுத்தனர்.,

அதன்படி உரப்பணூர் கண்மாயை மூவேந்திரன் என்பவரும், புள்ளநேரி கண்மாயை மணி என்பவரும், கரடிக்கல் கண்மாயை விக்னேஷ்பிரபு என்பவரும், கோவிலாங்குளம் கண்மாயை ஜெயசீலன் என்பவரும், கண்ணணூர் சிறிய கண்மாயை முத்துக்குமார் என்பவரும், கண்ணணூர் பெரிய கண்மாயை ஜெயச்சந்திரன் என்பவரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்தனர்.,

ஒரு வருட காலத்திற்குள் கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை மட்டும் வேரோடு பிடுங்கி அகற்றிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.,




