• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேங்கி கிடந்த குப்பைகளை தானாக முன்வந்து அப்புறப்படுத்திய எம்எல்ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென ஆய்வு மேற்கொண்ட எம் வி கருப்பையா எம்எல்ஏ தோடனேரி செல்லும் பாதையில் தேங்கிக் கிடந்த குப்பைகளை பார்வையிட்டு அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதாக எம்எல்ஏவிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சமயநல்லூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தெருக்களிலும் சாலைகளிலும் கொட்டுவதால் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக கூறினார்கள். இதனையடுத்து ஊராட்சி செயலாளரை அழைத்த எம்எல்ஏ ஒரு வாரத்திற்குள் தேங்கி கிடக்கும் குப்பைகளை ஒரு வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் குப்பைகளை தெருக்களில் கொட்டாதவாறு ஆங்காங்கே குப்பை தொட்டிகளை வைத்து குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தானே குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார் உடனே தூய்மை பணியாளர்கள் நாங்கள் குப்பைகளை அகற்றுகிறோம் என்று கூறினார்கள்.

தொடர்ந்து சமயநல்லூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக போனில் பேசி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். வைகை நகர் பகுதிக்கு சென்ற எம்எல்ஏவிடம் இதுவரை இவ்வளவு தூரம் எம்எல்ஏ வந்து எங்களை பார்த்ததில்லை. நீங்கள் வந்து சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி எம்எல்ஏவிடம் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து ஊராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊராட்சி செயலாளரிடம் கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் கிளைச் செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.