• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கண்காணிப்பு கேமரா பொதுமக்கள் பாராட்டு..,

ByKalamegam Viswanathan

Sep 28, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் மருதுபாண்டியனிடம், எட்டாவது வார்டு பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று உடனடியாக இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலர் மருதுபாண்டியன் அவர்களை வார்டு பொதுமக்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.