இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி ஒட்டம்பட்டி கோவில் தெருவில்
வாறுகால் பணிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையானது இதுவரை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் ஒரு வழி சாலை போல குறுகளாக உள்ளன.

மேலும் ஒரு சில இடங்களில் பாலத்தில் மிகப்பெரிய அளவில் உடைப்புகள் ஏற்பட்டு இரண்டு முதல் மூன்று அடி ஆழம் வரை உள்ளது. இந்த சாலையில் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் முதியோர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக செட்டியார்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக மூட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




