அரியலூர் மாவட்டம், அரியலூர் என் ஜெ மஹாலில் திருமண மண்டப த்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை(கைவினைப்பொருட்கள், கைத்தறி, தொழிலாளர், மீன்வளம் போன்றவை) மேம் படுத்துதல்” எனும் மையக் கருத்துடன் நடைபெற்ற 72-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, 384 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் பயிர்கடனுதவிகளும், 133 பயனாளிகளுக்கு ரூ.54 இலட்சம் மதிப்பில் கால்நடைப் பராமரிப்பு கடனுதவிகளும், 54 பயனாளி களுக்கு ரூ.5.59 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளும், 01 மாற்றுத்திறன் பயனாளிக்கு ரூ.50,000 மதிப்பில் கடனுதவிகளும், 02 பயனாளி களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் தாட்கோ கடனுதவிகளும், 02 பயனாளிகளுக்கு ரூ.1.5 இலட்சம் மதிப்பில் சிறு வணிகக் கடனு தவிகளும் என மொத்தம் 576 பயனாளிகளுக்கு ரூ.9.46 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை,மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலை யில்வழங்கி சிறப்புரை
யாற்றினார் .

தொடர்ந்து கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக பணி யாற்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி, கைத்தறி மற்றும் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற (10 ஆம் வகுப்பு) சங்கப் பணியாளர்களின் குழந்தை களுக்கும், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். முன்னதாக 72-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் மா.உமாமகேஸ்வரி கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்ப திவாளர் சை.அ. மீர் அஹசன் முசபர் இம்தியாஸ், துணைப் பதிவாளர், பொது விநியோத் திட்டம் க.சாய்நந்தினி, ஒன்றிய திமுக செயலாளர்கள் இரா .கென்னடி, அன்பழகன், தெய்வ இளையராஜன்,அறிவழகன், அசோகச் சக்கரவர்த்தி, ஆர் கலியபெருமாள், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர திமுக செயலாளர் இரா . முருகேசன் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பணியாளர் கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள், விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
