• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேபிள் சேர் வழங்கல்..,

ByS.Ariyanayagam

Feb 26, 2026

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கரங்களினால் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் உள்ளது. பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக கிராம மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் , விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர் திருமலை ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக ரூ 6 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் கரங்களினால் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்திய மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக எங்கள் திருமலை ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு நேரத்தில் டேபிள் சேர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என திருமலை ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி முருகேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.