• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை..,

ByS.Ariyanayagam

Feb 26, 2026

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை,தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த RMTC-நகர், ராதாராஜ் நகர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு சரவணன் என்பவரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திகேயன், செந்தூரியன் உள்ளிட்ட 5 பேரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் முயற்சியால் இன்று

கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் 3 பேரை விடுதலை செய்தும் முதல் மற்றும் 2-வது குற்றவாளிகளான கார்த்திகேயன் மற்றும் செந்தூரியன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.