• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்தல் கூட்டங்கள் குறித்தான நெறிமுறைகள்!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தலின்போது நடைபெறும் கூட்டங்களுக்கான நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது!

*கட்சி கூட்டங்கள் குறித்து முன்னதாகவே, கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் குறித்து உள்ளூர் காவல்துறை அல்லது பிற தொடர்புடைய அலுவலர்களுக்கு வேட்பாளர் தெரியப்படுத்த வேண்டும்.

*கூட்டத்திற்காக ஒலிபெருக்கிகள் பயன்பாட்டிற்கு தொடர்புடைய அலுவலருக்கு முன் கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

*கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் மீது, காவல் துறையில் புகாரளிக்க வேண்டும்! தாங்களே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

*தேர்தல் கூட்டங்களுக்காக அரசு பணம் எதுவும் செலவிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டவர்களும் தவிர பிற அரசு ஊழியர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது.

*எந்த ஒரு கட்சியின் வேட்பாளரும் உரிய உள்ளூர் அலுவலர்களின் அனுமதியின்றி பொதுக் கூட்டங்களையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்துதல் கூடாது.

*பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் அதிக கூட்டம் சேர்க்க கூடாது