• Thu. Apr 25th, 2024

இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்

ByA.Tamilselvan

Sep 25, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. . இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *