விருதுநகர் அருகே கே.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் (70), இவர் அக்கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர் உடல் நல குறைவால் இன்று காலையில் இறந்துவிட்டார்.

இன்று அவரின் உடலை அடக்கம் செய்ய வழக்கமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒரு தரப்பினர் எங்களுக்கு சொந்தமான இடம் இந்த வழியாக உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாதையில் டிராக்டரை நிறுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பதட்டமான சூழ்நிலை நிலைவியதால் சம்பவ இடத்திற்கு சாத்தூர் வட்டாட்சியர் ராஜமாணி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் ஆகியோர் வந்து இரண்டு தரப்பினருடன் பேசி சமாதானம் செய்தனர்.
இது சிவில் வழக்கு இருவரும் நீதி மன்றத்தில் சென்று தீர்வு காணுங்கள் என்று தெரிவித்தால் இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்னர் வழக்கமாக இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வழியாக இறந்த மூக்கம்மாள் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.