• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் த. வெ. கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Mar 12, 2026

தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும் அரசியல் காப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும் தமிழக அரசை கண்டித்தும் அரசு அறிவித்த எஸ் ஓ பி ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமை வகித்தார். இதில் 300க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கையில் பதாகைகளோடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.