அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்றுநடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்மாவட்ட தலைவர் துரை. வேலுச்சாமி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் த சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஆர் ராமசாமி வரவேற்றார்.சங்கத்தின் வட்ட தலைவர்கள் எம் நமச்சிவாயம், கோ மாசிலா மணி,வே.முருகேசன்,வட்டச் செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், எஸ் கலியமூர்த்தி,ஆர் சண்மு கசுந்தரம், வட்ட பொருளா ளர்கள் போ மணிமொழி,ஆர் இராமச் சந்திரன், மு கோவிந்தசாமி, உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தவேண்டும்,எழுவது வயது நிறைந்த அனைத்து ஓய்வு ஊதியர்களுக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம ஊழியர்கள் பல துறை ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட செயலாளர்சி.சொக்கலிங்கம்,முன்னாள் மாவட்ட செயலாளர் மூ.மகாலிங்கம், வேளாண்மை பொறியாளர் ட்ரில்லிங் பிரிவு பணியாளர் சங்கம் து.ரவிச்சந் திரன், தமிழ்நாடு அரசு மேல் நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கழக முன்னாள் மாவட்ட செய லாளர் எஸ் பி தமிழ்செல்வன்,அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் எம் பெரிய சாமி,சங்க நிர்வாகிகள் என் முருகேசன், என் பொன்னுசாமி உள்ளிட்டோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பா .சுந்தரராஜன் நன்றி கூறினார்












; ?>)
; ?>)
; ?>)