• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Feb 5, 2026

மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் செட்டியேரி கரை பூங்கா காமராஜர் சிலை முன்பு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் கண்டனஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே .மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்து, மத்திய அரசை செயல்பாட்டை கண்டித்து உரையாற்றினார்.

முன்னதாக, அரியலூர் தெற்கு வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஏபிஎஸ் பழனிச்சாமி, இராகவன், மீன்சுருட்டி அண்ணாதுரை, ஆர் தியாகராஜன், கலைச்செல்வன், டி.சீனிவாசன் வட்டார தலைவர்கள் திருநாவுக்கரசு, பிரகாஷ், ஏபிசுரேஷ், சக்திவேல்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எம் . ஆர் பாலாஜி,மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் விக்னேஷ், நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பூங்கொடி,நகர செயலாளர் ஆன்டனிதாஸ், நகர பொருளாளர் சங்கர், மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,நகர காங்கிரஸ் தலைவர் மா.மு .சிவக்குமார் நன்றி கூறினார்.