


தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகள் 157 ஊராட்சிகள் 3 நகராட்சி வார்டுகள் எட்டு பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 250 இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்காக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் விளையாட்டு போட்டியை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர்செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இதில் 100 மீட்டர் ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், சைக்கிள் மிக வேகம், மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல், பானை, உடைத்தல் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட உள்ளது.
இந்த பரிசுத்தொகையின்மொத்த மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

