• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Feb 9, 2026

அரசு மருத்துவமனையில் வெளிநாட்டுக்கு செல்வோருக்கான மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்பாட்டம்
திருச்சியில் இயங்கி வரும் #GAMCA (#Gulf_Approved_Medical_Centers_Association) மருத்துவ பரிசோதனை மையத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தக் கோரி

வீட்டை வித்து நகையை அடகு வைத்து… பிழைக்க வெளிநாடு செல்லலாம் என்று நினைத்தால்… இல்லாத சளியை இருக்கு என்று சொல்லி பணம் சம்பாரிக்கும் தனியார் மெடிக்கல் சென்டர்களால்,

கோவணம் தான் மிச்சம் என்ற அடிப்படையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் மெடிக்கல் சென்டர்களுக்கு கோவணத்தைக் கூட தருகிறோம் என்று உணர்த்தும் வகையில்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து மனு அளிக்கப்பட்டது.

பிழைக்க வழியில்லாமல் பிழைப்பை தேடி அயல் நாட்டிற்கு செல்லும் நம் சொந்தங்களிடம்

அவர்களின் அவசர தேவையை பயன்படுத்தி அவர்களிடம் இல்லாத #சளியை இருக்கிறது என்று சொல்லி பணம் பறிக்கும் வேலையில் இறங்கும் காம்கோ நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தனியார் மெடிக்கல் சென்டர்களின் உரிமையாளர்களையும், உங்களது பிரச்சனைகளை சரி செய்கிறேன் என்று சொல்லி பணம் சம்பாரிக்கும் இடைத் தரகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்…

தன் குடும்பத்தையும் விட்டு, தன்னுடைய சொந்த பந்தங்களையும் விட்டு விட்டு, வட்டிக்கு கடனை வாங்கி அயல் நாட்டிற்கு செல்ல, ஓடி அலைந்து, திரிந்து ஒரு விசா எடுத்து,”#அப்பாடா” என்று,நம் குடும்பத்தை காப்பாற்ற நாம் வெளிநாட்டிற்கு செல்ல போகிறோம் என்று,தன் குடும்பத்திற்கு ஆதரவு சொல்லி, பெருமூச்சு விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு…

அபாயகரமாக காத்திருக்கிறது இந்த #மெடிக்கல்டெஸ்ட்.. ஆமாம்,எந்த ஒரு வியாதியும் இல்லாமலும் அன்பிட் (#unfit)என்ற செய்தி…

“இல்லாத #சளியை இருக்கு என்று சொல்லியும், உங்கள் நெஞ்சில் ஏதோ தழும்பு போல் இருக்கு என்று சொல்லியும்”, அவர்களை அன்பிட்(unfit) செய்து அவர்களுக்கு அன்பிட்டான(unfit) என்ற எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்காமல் வெளி மாநிலத்திற்கு அலையவிட்டு, மறுபடியும் தன் வசம் வர வைத்து மீண்டும் அவர்களிடம் பணம் பெற்று கொண்டு, கடன்காரனாக ஆக்கி அதை பிட்(#Fit) செய்து ஏமாற்றி பிழைக்கும் தனியார் மெடிக்கல் செண்டர்களின் ஏமாற்றுத்தனம்…

அரசாங்கம் கொண்டுவந்துள்ள உடல் பரிசோதனை நிலையத்தில் உடல் பரிசோதனை செய்து அவர்களுக்கு எந்த ஒரு சளியும் இல்லை, தழும்பும் இல்லை என்ற ஆதாரம் இருந்தும்‌. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டுக்கு சென்றாவது சம்பாரிக்கலாம் என்று காத்திருக்கும் இளைஞர்கள்..

மனம் உடைந்து மன அழுத்தத்துடன் காம்கோ நிறுவனத்தின் அங்கமான தனியார் மெடிக்கல் சென்டர்களில் அவர்கள் கேட்கும் பணத்தை வேறு வழியின்றி கொடுத்து விட்டு வெளியில் சொல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் …

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொதுநலன் கருதி.. தனியார் மெடிக்கல் சென்டர்களில் நடக்கும் போலி தனத்தை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம்…