
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை மதுரை திருச்சி கோவை மண்டலம் நீர்வளத்துறை சங்கங்கள் சார்பாக அந்தந்த மண்டலங்களில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும்,தமிழக அரசில் பணிப புரியும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை ஊழியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.
கட்டை கணக்கர் பதவியினை நெடுஞ்சாலைத் துறையில் நடைமுறையில் உள்ளது போல் மாநில சேவையாக்கப்பட வேண்டும் அதிகமாக உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவில் தீர்வு செய்வதற்கு மண்டல அலுவலகங்களில் சட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதி ராஜா மாவட்ட தலைவர் தமிழ் மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மேற்கு வட்ட கிளை தலைவர் நடராஜன் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜா உட்பட நீர்வத் துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கண்டன கோசங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
