விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உயிர் நீத்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விருதுநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷித் செயலாளர் ஆனந்த் தலைமையில், ஆர். எஸ். எஸ். மாநில பொறுப்பாளர் சின்ன பாலன் மோட்ச தீபம் ஏற்றினார். இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் பொன்னையா, பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஞான பண்டிதன், பாரதிய ஜனதா நகர தலைவர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து கோஷமிட்டனர்.