• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்வாகா சாலை வரியை தமிழக அரசு கைவிட கோரியும், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு டாக்ஸி செயலாளர் கண்ணன் , நகரக் கன்வினர் சுப்பிரமணியம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்; ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.