கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700 இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய மதவெறி கும்பலை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் தாம்பரம் சண்முக சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப், விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு அவர்கள் கலந்து கண்டன உரை ஆற்றினர்.
காங்கிரஸ், மதிமுக, , கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி கட்சியினர் கிறிஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,




