தூத்துக்குடியில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் (SIR) எஸ்ஐஆர்-ஐ கண்டித்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷை திருநெல்வேலி கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் தாக்கியதை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக விவிடி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் சிவில் உரிமை கழக மாவட்ட தலைவர் பாதர் செல்வராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணைச் செயலாளர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி கண்டன உரை நிகழ்த்தினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பல அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியை மக்கள் சிவில் உரிமை கழக மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் M.ராஜா போஸ் ரீகன் ஒருங்கிணைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








