திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனராக சூரியநாராயணன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றலாகி சென்றார்.

இந்த நிலையில்அழகர்கோவில் துணை கமிஷனரான நாராயணன் (பொறுப்பு) ஏற்று கவனித்து வந்தார். இதற்கிடையில் துணை கமிஷனர் நாராயணன் விடுமுறையில் சென்றார். இந்த நிலையில்இந்து சமய அறநிலை துறையின்மதுரை மண்டல இணை கமிஷனர் செ. மாரியப்பன் கூடுதல் பொறுப்பு ஏற்று கவனித்து வந்தார்.இந்த நிலையில்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று துணை கமிஷனராக ரா.ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
இவர்ராமநாதபுரம் இந்து சமய அறநிலை துறையின் உதவிகமிஷனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது










