தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதுவிலக்கு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்வழியாக வந்த நான்கு பேரை மடக்கிப்பிடித்து கிடுக்குபிடி விசாரணை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சாவை 5 பார்சல்களாக சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து, உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் நான்கு நபர்களும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டு இவர்களின் விலாசங்கள் கண்டறியப்பட்டது.


அதன்படி திருச்சி மாவட்டம் இந்திரா நகர் கடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அர்ஜுன் என்பதும், ஸ்ரீரங்கம் பஞ்சப்பூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மலர் மணி மகன் தமிழ்வாணன் என்பதும், திருச்சி கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ருக்மான் என்பதும், திருச்சி கள்ளக்குடியைச் சேர்ந்த காந்தி காலனி தெருவை சேர்ந்த சிலம்பன் மகன் ஜெகநாதன் என்பதும் தெரியவந்ததை அடுத்து இவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தனர் யாரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர் என தீவிரமாக விசாரணை செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
