• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொம்மை விளையாட்டால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினை

ByA.Tamilselvan

Oct 29, 2022

பிக்பாஸ் என்றாலே விளையாட்டும் அதன்மூலம் வரும் பிரச்சினைகளும் தான். பொம்மை விளையாட்டால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கினால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அசீம், ஷிவின் இவரும் சிறைச்சாலைக்கு செல்கின்றனர். அப்போது அசீம் சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை. அடுத்த முறையிலிருந்து நோ வொர்க் தான் என சொல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு பொம்மை டாஸ்க்கினால் அசீமிற்கும் தனலட்சுமிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.