• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ரேபரேலி தொகுதியில் முதல்முறையாக களமிறங்கும் பிரியங்காகாந்தி

Byவிஷா

Feb 14, 2024

வருகிற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாகந்தி மகள் பிரியங்காகாந்தி முதல்முறையாக களமிறங்குகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1999-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் ரேபரேலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். எனினும் வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிட மாட்டார். ராஜஸ்தானில் இருந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது..,
வயது முதுமை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த முறை ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட மாட்டார். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ{க்கு போதிய எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கிருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்வு செய்யப்படுவார்.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும். அவர் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி வீட்டில் கடந்த திங்கள்கிழமை விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த விவகாரங்களில் கட்சி தலைமை விரைவில் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.