சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக டிஜிபி ஜெயந்த் முரளி
(ஐ.பி.எஸ்) கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் தமிழக டிஜிபி ஜெயந்த் முரளி…..
தனியார் பாதுகாப்பு காவலர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டன.
ஆனால் அவர்கள் சமூகத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிலைநாட்டும் முக்கிய பங்களிப்பு அளிக்கின்றனர்.
பாதுகாப்பு காவலர்கள் இல்லாமல் சமூகத்தை யாரும் கற்பனை கூட செய்ய முடியாது அவர்கள் நமது சமூகத்தில் மறைக்கப்பட்ட வீரர்கள் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் பாதுகாப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
