• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் -டாக்டர் .என்..மது

Byதரணி

Nov 27, 2022

தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்து விளக்கு விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.
தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், முன்னாள் தமிழக டி.ஜி.பி.ஷாம் சுந்தர்(ஐபிஎஸ்)), எழுத்தாளர் பட்டு கோட்டை பிரபாகர்,மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற துப்பறிவு நிறுவனங்களில் உள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், குற்றவியல் நிபுணர்கள்,தடயவியல் நிபுணர்கள் , சைபர் குற்றவியல் வல்லுனர்கள் மற்றும் பல்வேறு தனியார் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தனியார் துப்பறியும் துறையின் தலைவர் முன்னாள் விமான படை வீரர் டாக்டர் .என்..மது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் .பொதுமக்கள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மை உள்ள துப்பறிவு நிறுவனங்களை அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் மற்றும் அவசர காலகட்டங்களில் காவல்துறையினர் உடன் இணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய அங்கிகாரம்.போன்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன் வைத்தார்.சட்டம் குற்றவியல் தடவியில் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். ஓய்வு பெற்ற தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரி ராணுவ அதிகாரிகள் மூலம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகம் நடத்த அனுமதி வேண்டும். என்றும் கூறினார்