• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பிரதமர் தமிழகம் வருகை.., தலைமைச் செயலகத்தில் ஆலோசனை..!

Byவிஷா

Jan 18, 2024

பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் கோலோ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து ஜனவரி 20ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் பிரதமர் மோடி நாளை மறுநாள் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் வருகை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண், உயர் காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.