• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

Aug 17, 2023


இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார். அதன்படி தற்போது நகரங்களில் இருக்கும் சொந்த வீடு இல்லாத நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான திட்டங்களை அரசு விரைவில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவ்வாறு சொந்த வீடு வாங்க இருப்பவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மனிதர்களுக்கான அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை மற்றும் இருப்பிடம் மட்டும்தான். இவற்றில் இருப்பிடம் என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதற்கு அதிகமாக செலவு ஆகும் என்பதால் மக்கள் பலரும் அந்த எண்ணத்தை அப்படியே கைவிடுகின்றனர். இதனால் மக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. மேலும் சொந்த வீடு இல்லாத மக்களுக்காக மத்திய அரசு விரைவில் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.