• Thu. May 2nd, 2024

குமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!

இந்திய சுதந்திரத்தின் 77 வந்து ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில். நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம், செம்மான்குடி சாலையில்  காங்கிரஸ் பொது கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்..,
ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத்ஜோடா நடைபயணத்தையும், அண்ணாமலை மேற்கொண்டுள்ள பாதி, பாதி பாதயாத்திரையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் குமரி மாவட்டத்தை கடந்து, கேரள மாநில தொடக்கப்பகுதியான பாரசாலையை அடையவே மூன்று நாட்கள் ஆனது.
நம் மாவட்டத்தில் ஒருவர் பாத யாத்திரை என அறிவித்தது பாதி, பாதி பாதயாத்திரை மேற்கொண்டு விட்டு சொகுசு வாகனத்தில் பயணிக்கிறார். அண்ணாமலை அள்ளி விடுவதில் வல்லவர். ஒன்றிய அரசு குமரியில் சாலை பணிகளுக்காக அறிவித்த தொகை ஒன்று. அனுமதித்த தொகை ரூ.26கோடி மட்டுமே தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து தொடர்ந்த முறையீடு, நாடாளுமன்றத்தில் பேசியதின் அடிப்படையில் இப்போதுதான் மீதி தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.48கோடி அனுமதித்தாக பொய்யை சொல்லும் அண்ணாமலை அதற்கான முறையான கணக்கை காட்டவேண்டும்.நான் உண்மையான நிதி ஒதுக்கீடு கணக்கை குமரி மக்கள் முன் வைக்கிறேன். பொன்னார் அமைச்சராகவும் இருந்து கொண்டு அவரது சொந்த பணத்தில் இந்த மாவட்டத்தில் என்ன பணிகள் செய்தார் என பொதுவெளியில் சொல்லவேண்டும். நான் என் சொந்த பணத்தில் குமரி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு மற்றும் ஏனைய பணிகளுக்கு நான் செலவு செய்த எனது சொந்த பணம் பற்றி சொல்கிறேன்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் என் தந்தை வசந்தகுமாரை நீங்கள் தேர்வு செய்தீர்கள். என் தந்தை இருந்த இடத்தில் என்னை தேர்வு செய்து, என் தந்தை வழியில் பொதுப்பணி செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்காக உழைப்பதும், உதவி செய்வதுதான் எனது வாழ் நாள் பணி என தெரிவித்தவர்.
இந்திய சுதந்திர வேள்வியில் ஈடுபட்ட நம் காங்கிரஸ் தியாகிகளின் உழைப்பால் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் என இந்த சுதந்திர நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். மதத்தின் பெயரால் நாட்டு மக்களை கூறுபோடும் பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாளும் உழைப்போம். பற்றி எரியும் மணிப்பூர் பிரச்சினை 70 நாட்களை கடந்தும் தொடர்ந்த போதும் அது குறித்து வாய் திறக்காத பிரதமரை, இந்தியாவின் கோவில் ஆன நாடாளுமன்றத்திற்கு வர வைத்து வாய்திறக்கவே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை “இந்தியா”கூட்டணி கட்சிகள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மோடி ஆட்சியின் அவலம் என தெரிவித்த விஜய் வசந்த்.
வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நம் ஒவ்வொருவரின் உழைப்பையும் இந்தியா கூட்டணி வெற்றி பெற உழைப்போம் என்பதை, இந்திய சுதந்திரத்தின் 77வது ஆண்டில் உறுதி எடுத்துக்கொள்வோம் எனவும் கூடியிருந்த மக்களிடம் கோட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *