• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் சந்திப்பு..,

BySeenu

Feb 19, 2026

கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய சேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தனர்.

பிப்ரவரி 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

12 ஆண்டு ஒரு முறை கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும் கடைசியாக 2012-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது நாளை முதல் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் வைத்து யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்க இருக்கிறது.

இந்த வைபவத்திற்கு ரிஷிகேஷ் சுவாமி தயானந்த ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி சாஷாத்கிருதானந்த சரஸ்வதி மற்றும் கோவை அர்ஷ வித்யா குருகுலத்தைச் சேர்ந்த சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி, பேரூர் ஆதினம்,கௌமாரார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பல மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கின்றனர்.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் பக்தர்களுக்கு அனைவருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மகா அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.