• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்

ByA.Tamilselvan

Sep 15, 2022

உக்ரைன் மீது ரஸ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் மோதியவிபத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார். அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.