• Sat. Apr 20th, 2024

மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர்

ByA.Tamilselvan

Oct 5, 2022

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.அப்போது மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார் உக்ரைன்அதிபர்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்தார்.
போர் பதற்றம் தொடர்ந்து நீடித்துக்கொண்டே வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனில் நிலவி வரும் சூழல் பற்றி இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. மேலும் ரஷ்யா உடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் அதிபரிடம் பேசும் போதும் பிரதமர் மோடி”போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடங்குவது அவசியம் என கோரிக்கை விடுத்தார்.ஆனால் உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த தியாராக இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *