இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பாஸ்போர்ட் என்பது வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே தேவைப்படும் என்ற நிலையில் தற்போது அனைத்து இந்தியர்களுக்கும் இனி இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியபோது இ-பாஸ்போர்ட் குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் இதற்காக நாசிக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்துக்கு 4.5 கோடி மைக்ரோசிப் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.படிப்படியாக நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.