கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கிங்ஸ்லின், குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.




