

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கிண்டலடித்து கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். , “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்ட மாக குறிப்பிட்டுள்ளார்.. , பிரதமர் மோடியை ‘உச்ச நடிகர்’ என்று மீண்டும் பிரகாஷ் ராஜ் விமர்சித் துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் சாலையில் கிடந்த காலி குடிநீர் பாட்டில்களை பொ றுக்கி தூய்மைப் பணியில் ஈடு பட்டது போன்ற புகைப்படங்க ளை பாஜகவினர் சமூக வலை தளங்களில் வைரலாக்கி வந்தனர்.

எவ்வளவு எளிமையான, நாட்டிற் காக உழைக்கும் பிரதமர் கிடைத் துள்ளார் பாருங்கள்… என்று பாஜக-வினர் வழக்கம்போல மோடி துதியில் ஈடுபட்டு வந்தனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரகாஷ் ராஜ், அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “கேமிரா வை கையாள்வதில் நமது உச்ச நடிகர் மற்றும் இயக்குநரை யாரும் மிஞ்ச முடியுமா?” என்று கடுமை யாக கிண்டலடித்துள்ளார்.
