மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திரம் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோவிலில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்
வரலிங்கம், நந்திகேஸ்வரர், சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்கரிக்
கப்பட்டு, கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தருக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மழை பெய்தாலும், பக்தர்கள்
அதை பொருட்படுத்தாமல், பிரதோஷத்தை கண்டு, சிவ பெருமானின் அருளை பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழில்
அதிபர் எம். வி.எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், வள்ளிமயில், கோயில் கணக்கர் சி பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.