• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரபாகரன் விவகாரம் -பழ.நெடுமாறனை விசாரிக்க முடிவு

ByA.Tamilselvan

Feb 14, 2023

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார் இதுகுறித்து உளவுத்துறை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால் அவரிடம் விசாரணை நடத்த உளவுத்துறை முடிவு செய்துள்ளது.. தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.