பாலைவனங்கள் நிறைந்த ஐக்கிய அரபு நாடுகளிலும் வெள்ளம் போகும் அளவுக்கு மழை கொட்டிதீர்க்கிறது.
வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதே நேரம் மழை காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும். அந்த வகையில் ஐக்கிய அரபு நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.