• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தேள் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள். ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் 2021டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சென்னையில் நேற்று முன்தினம் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால்படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுகாரணம் என்னவென்று விசாரித்தால், திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதே பதிலாக வருகிறது.

பிரபுதேவா நடித்து சமீபத்தில் வெளியான எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. 2018ல் குலேபகாவளி, மெர்க்குரி மற்றும் லக்ஷ்மி, 2019ல் சார்ளிசாப்ளின் 2, தேவி- 2 மற்றும் இந்த வருடம் பொன்மாணிக்க வேல் என பிரபுதேவா நடித்து வெளியான எந்தப் படமும் வணிகரீதியான வெற்றியை கொடுக்கவில்லை. ஓடிடியில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்துக்கும் பெரிய வரவேற்பு இல்லை.

இதனால், திரையரங்குகளில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள படத்தைத் திரையிட யாரும் ஆர்வம் காட்டவில்லைஎன்றே கூறுகிறார்கள். அதோடு, இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில், ஆன்டி இண்டியன் உள்ளிட்ட சில படங்கள் திரைக்கு வருகிறது. அதோடு, 200 திரையரங்குகளுக்கு மேல் சிம்புவின் மாநாடு படமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், தேள் தள்ளிப் போகிறது.