• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், . மதுரையில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

மேலும் கட்சி நிகழ்ச்சி மட்டும் தான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசு நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு தான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரிக்கு பிரதமர் வருவதும் உறுதியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.