• Fri. Apr 26th, 2024

வேலூரில் கொடி கட்டி பறக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்!

Byமதன்

Jan 6, 2022

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களும் ஆந்திரா மாநிலம் ஒட்டி உள்ளது தமிழக அரசால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. மேலும் சர்க்கரை பருப்பு மற்ற அத்தியாவசிய பொருட்களும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியிலும் மலிவு விலையில் கொடுக்கக்கூடிய பருப்பு சர்க்கரை போன்ற மற்ற அத்தியாவசிய பொருட்களிலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கு ரேஷன் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்களை கடத்தும் கும்பல்கள் அதிகமாக பெருகி வருகின்றன.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டம் முதல் அளவில் உள்ளது இங்கிருந்து ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற தென்னிந்தியா முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் வேலூர் மாநகர பகுதியை சேர்ந்த ஒரு நபர், புண்ணிய நதியான கங்கையின் பெயரை கொண்டவர் குறைந்தபட்சம் பத்து வருடங்களாக ரேஷன் பொருட்கள் கடத்தலில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வருகிறார்.

இவர் மீது ஏற்கனவே ரேஷன் பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக வழக்கு உள்ளது. ஆனால் இவர் தன் தொழிலில் கடமை என இன்றுவரை ஏழைகளின் அத்தியாவசிய பொருளான விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை பருப்பு கோதுமை ரவை இதுபோன்ற மலிவு விலையில் கிடைக்கக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து பணம் பார்ப்பதில் வல்லவர்.

இவர் மீது என்ன வழக்கு போட்டாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை நான் என் தொழில் எப்போதும் போல் நான் செய்துதான் கொண்டிருப்பேன் என்கின்ற இறுமாப்பில் இருக்கின்றார். இவர் பட்டப்பகலில் தன் மோட்டார் சைக்கிளில் ரேஷன் பொருட்கள்  கடத்தி வருவது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இது காவல்துறைக்கும் தெரியும் உணவு பாதுகாப்புத் துறைக்கும் தெரியும் அவர்களுக்கு சேர வேண்டியது சேர்ந்து விடுவதால் யாரும் ஏதும் கண்டுகொள்வதில்லை. இனியாவது பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களில் கை வைப்பவர்கள்  மேல் அரசு கை வைக்க வேண்டும் இதை மாவட்ட நிர்வாகமும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்று பொது மக்களின் கேள்வியாக உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *