• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் வத்திராயிருப்பு 2வது வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு..

Byகாயத்ரி

Feb 14, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வார்டு எண் 2-க்கான உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க.முத்தையா எதிர்பாராத விதமாக மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.இதனால் வத்திராயிருப்பு 2வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.