• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பிரபல 70ஸ் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணையவுள்ளார்…

Byகாயத்ரி

Aug 10, 2022

தெலுங்கு சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போது இருந்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடிப்பில் வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திலும், அபூர்வ ராகங்கள் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். சினிமாவில் இருந்தபோதிலும் அரசியலில் ஆர்வம் காட்டிய ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கடந்த 2009 ஆம் ஆண்டில் செகந்திராபாத்-ன் எம்.எல்.ஏ ஆனார். அடுத்த தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்ததால். அரசியலில் இருந்து விலகினார். இந்த நிலையில், சமீபத்தில் தெலுங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான ஏரெலா ராஜசேகரை, ஜெயசுதா சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலின்படி அவர் விரைவில் பாஜகவில் இணையவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.