மீண்டும் மோடி பிரதமராக முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு.
பீகாரின் முதலமைச்சராக 8ஆவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுகொண்டார்.இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..
வரும் 2024 தேர்தலுக்கு பின் நரேந்திரமோடி ,பிரதமராக இருக்கமாட்டார் என்றார்.மேலும்அவர் பேசும் போது ” முதலமைச்சராக நான் நீடிக்க முடியாது என்று பாஜக வினர் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் நான் கூறுகிறேன் வரும் 2024 ல் லோக்சபா தேர்தலுக்கு பின் மோடி பிரதமராக இருக்க முடியாது. இந்த தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.