• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் தவறான பாதை எனும் குறும்படத்திற்கான பூஜை

ByP.Thangapandi

May 29, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய கனரா வங்கி தெருவைச் சேர்ந்த பிரதாப் (24). இவர் ஜெயிலர், மார்க்ஆண்டனி, தூக்குச்சட்டி, கண்ணபிரான் குடும்பத்துகாரங்க, டோர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இளைஞர்கள் கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி தவறான பாதைக்கு செல்வதை தடுக்கும் விதமாகவும், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தவறான பாதை எனும் தலைப்பில் குறும்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பூஜை நடைபெற்றது. பழைய கனரா வங்கி தெருவில் மாரியம்மன் கோவிலில் குறும்பட இயக்குநர் பிரதாப் தலைமையில் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.